ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்க உதவிய விஜய் சேதுபதி!!
ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்க உதவிய விஜய் சேதுபதி!!
இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற உதவி செய்து வரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.
தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், சீனு ராமசாமியின் மாமனிதன், வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உதவியிருப்பதாக தெரியவந்துள்ளது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன், இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு விஜய் சேதுபதி அமைதியாக உதவி வருவதாகவும், அவரின் ஆதரவுடன் செயல்படும் தனது அரசு சாரா அமைப்பான வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in