தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் !!

தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் !!

Update: 2022-03-18 09:12 GMT

விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. சாலை விபத்துகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சாலைகளை உருவாக்கிட வேண்டும்.

குறிப்பாக விபத்து நடக்கக்கூடும் நெடுஞ்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ள இடங்களில் சிக்னல்கள், வேகத்தடைகள், கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும். விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


newstm.in

Similar News