தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தினயார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்படுகிறார்.
சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in