விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது விஜயின் ‘பீஸ்ட்’.. வெளியான தேதி விவரம் !!
விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது விஜயின் ‘பீஸ்ட்’.. வெளியான தேதி விவரம் !!
நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைப்பில், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில், நடிகர் விஜய்யின் முதல் பான் இந்தியா படமாகவும் ‘பீஸ்ட்’ படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் கிடைத்தபோதும் கடந்த 5 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜயின் முந்தைய படமான ‘மாஸ்டர்’, அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் வெளியான 3 வாரங்களிலேயே ரிலீஸ் ஆனது. ஆனால் ‘பீஸ்ட்’ படம், திரையரங்குகளில் வெளியான 4 வாரங்கள் கழித்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
newstm.in