டென்னிசை தொடர்ந்து மிஸ் இந்தியா போட்டியில் கலக்கிய விஜய்யின் 'வாத்தி கம்மிங்'- வீடியோ !!

டென்னிசை தொடர்ந்து மிஸ் இந்தியா போட்டியில் கலக்கிய விஜய்யின் 'வாத்தி கம்மிங்'- வீடியோ !!

Update: 2022-07-05 18:23 GMT

2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி வெற்றியாளராக முதலிடம் பிடித்து, பெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட் - 2022 என்ற பட்டத்தை பெற்றார்.

ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் 2ஆவது இடமும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் 3ஆவது இடமும் பிடித்தனர். மேலும் பல இளம் அழகிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இதனிடையே, இந்த மிஸ் இந்தியா போட்டியில் டான்ஸ் ஆஃப் இந்தியா பிரிவில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அழகிகள் நடனமாடியுள்ளனர். இதில் அழகி பட்டம்வென்ற சினி ஷெட்டியும் நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள், சிறியோர், பெரியோர் என அனைவரும் நடனமாடி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். வட சென்னை கானாவுடன் வெஸ்டர்ன் இசை கலந்து அனிருத் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்.


newstm.in
 

Similar News