5 வயது சிறுவனை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை உள்ளூரைச் சேர்ந்தவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்தனர்.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உஜ்ஜல் முரா என்ற 5 வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் அனைவரும் சுனித் தந்தி என்பவருடைய வீட்டிற்கு முன்பு சென்றும் விளையாடினர். இதனால் திடீரென கோபமடைந்த சுனித் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கண்டித்துள்ளார்.

பின்னரும்  விளையாடியதால் ஆத்திரம் அடைந்த சுனித் தந்தி, சிறுவன் உஜ்ஜல் முராவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். சுனித் தந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். சிறுவனை சுனித் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் கோபமடைந்த கிராம மக்கள், உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுனித் தந்தியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்து உதைத்தனர். மேலும் அவரை உயிருடன் எரித்து கொலை செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மற்றும் சுனித்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


newstm.in

Tags: