விதிமீறல்.. பிரபல நடிகருக்கு அபராதம்..!

விதிமீறல்.. பிரபல நடிகருக்கு அபராதம்..!

Update: 2022-04-07 12:17 GMT

ஹைதராபாத் போக்குவரத்து போலீசார்ர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு பிலிம்களை (டின்ட் கிளாஸ்) நீக்கி வருகின்றனர். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் இந்த சோதனையில் இருந்து தப்புவது இல்லை.

சமீபத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சென்ற கார் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியது. அவருக்கு ரூ.700 அபராதம் விதித்த போலீசார், கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பிலிம்களை அகற்றினர்.

இதைத்தொடர்ந்து, நடிகர் மனோஜ் மன்சு, இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கார்களும் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கின. அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் அவருடைய ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரின் கண்ணாடிகளில் விதி மீறி, அளவுக்கு அதிகமான அடர்த்தியுடன் கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. அதை அகற்றிய போலீசார், அவருக்கு 700 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Similar News