ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறல்.. பரபரப்பு !
ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறல்.. பரபரப்பு !
ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அப்பகுதி வியாபாரிகள், வணிகர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் பேசிய விக்ரமராஜா, வணிக நிறுவணங்களில் ஆய்வு என்ற பெயரில் கடைகளில் புகுந்து உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் அத்துமீறுவதாக புகார்கள் வருவதாக தெரிவித்தார்.
சில இடங்களில் ஆய்வுபோதும் பணம் பறிக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பவடுதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் பிளாஸ்டிக ஒழிப்பிற்க்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். சமீப நாட்களாக தமிழகத்தில் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
newstm.in