விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு.. 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு.. 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
விருதுநகரில், 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 சிறுவர்கள் மற்றும் ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனைத் அகமது என 8 பேரை கடந்த மார்ச் 21-ம் தேதி போலீசார் கைது செய்தனர். சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜுனைத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஹரிஹரன், பிரவீன், ஜுனைத் அகமது, மாடசாமி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நான்கு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.