நாட்டையே உலுக்கிய விஸ்வமயா தற்கொலை..!! 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம்..!!

நாட்டையே உலுக்கிய விஸ்வமயா தற்கொலை..!! 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம்..!!

Update: 2022-05-24 04:40 GMT

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அப்போது, இவருக்கு கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

பெண் வீட்டார் திருமணத்தின்போது 100 சவரன் நகை, டொயாட்டா கார், நிலம் என ஏராளமான வரதட்சணையை கொடுத்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டில் அவருக்கு துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த விஸ்மயாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கிரண்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கை தீவிரமாக விசாரித்த வந்த காவல்துறையினர், வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் கிரண்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

விஸ்மயா மீது கணவரின் வரதட்சணை துன்புறுத்தலே, அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டு, கணவரின் கொடுமைக்குள்ளான, விஸ்மயா அனுப்பியதாக சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கேரளத்தில் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணை நிறைவடைந்து, விஸ்மயா தற்கொலையில் கணவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Similar News