திமுக மீது அதிருப்தியில் விசிக! காரணம் இதுதான்!!
திமுக மீது அதிருப்தியில் விசிக! காரணம் இதுதான்!!
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட திமுக கவுன்சிலர் பதவி விலக மறுப்பதால் விசிகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு திமுக குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கியது. ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள், கட்சி தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனால் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதியை மீறி வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், திமுக கவுன்சிலர் சாந்தி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தலைவராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அறிக்கைக்கு பிறகும், இவர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை. அவர், பதவி விலக முடியாது என்றும் தன்னை கட்சியை விட்டு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளுங்கள்" என தெரிவித்து வருகிறார்.
newstm.in