இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. சகோதரிகள் அதிரடி கைது !!

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. சகோதரிகள் அதிரடி கைது !!

Update: 2022-06-03 06:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா (27) என்ற இளைஞர், இரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வீட்டில் புகுந்தது. அங்கு உறங்கிக்கொண்டிருந்த சூர்யாவை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சத்தம்போட்ட அவரை அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் கடந்த 25ஆம் தேதி நிகழ்ந்தது.

மேலும், புகாரின்பேரில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். மேலும் சூர்யாவிற்கு வேறு எதும் முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சர்தார் (25 ) மற்றும் அவரது யோகராஜ் (25 ), கௌதம் (24 ), ரியாஸ் (24 )ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிக்கிய நால்வர் தான் சூர்யாவை வீடுபுகுந்து தாக்கியவர்கள் என்று தெரியவந்தது. மேலும், சர்தாருக்கும் சூர்யாவின் பெரியம்மா மகளான ஏற்கனவே திருமணமான 30 வயதான மனிஷாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மனிஷா திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் தன்னைவிட 5 வயது சிறியவரான சர்தாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த சூர்யா தனது சகோதரியான மனிஷாவை கண்டித்துள்ளார். ஆனால் மனிஷாவால் தனது காதலை விட முடியவில்லை. சகோதரன் சூர்யா தன்னை கண்டித்ததையும், அவன் உயிருடன் இருக்கும் வரை நாம் ஒன்று சேர முடியாது என்றும் மனிஷா தனது காதலன் சர்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சர்தார் தனது நண்பர்கள் யோகராஜ், கௌதம் மற்றும் ரியாஸூடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சர்தாரின்  திட்டத்திற்கு உதவிய மனிஷா மற்றும் அவரது சகோதரி சீமா தேவியை போலீசார் பிடிக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் தான் விஷம் குடித்து விட்டதாகவும் தன்னை பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார் மனிஷாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் மனிஷா விஷம் குடிக்காமல் நாடகமாடியது அம்பலமானது

மருத்துவமனையில் வைத்தே மனிஷா, சீமா தேவி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News