திருச்சி, நெல்லை, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு- வாக்குப்பதிவு தாமதம்‌ !!

திருச்சி, நெல்லை, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு- வாக்குப்பதிவு தாமதம்‌ !!

Update: 2022-02-19 08:19 GMT

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து வருகின்றனர். எனினும் ஒரு சில இடங்களில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வருகிறது. 

அதாவது, திருச்சி, நெல்லை, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதிய இயந்திரம் பொருத்தும் பணியால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம்‌ ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக  வாக்குப்பதிவு துவங்கவில்லை. புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், திருச்சி மாநகராட்சி 23 வது வார்டுக்குட்பட்ட கலைப் பள்ளி மானிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள 281-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. ஏர்வாடியில் உள்ள அரசு ஆண்கள் மேலநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு காலை முதலே ஏராளமானோர் வாக்களிக்க திரண்டனர். எனினும் வாக்குப்பதிவு கோளாறு காரணமாக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

newstm.in
 

Similar News