FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்பட்டதா? - பரவும் வீடியோவும் உண்மையும் !!
FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்பட்டதா? - பரவும் வீடியோவும் உண்மையும் !!
ஃபாஸ்டேக் ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோ தொடர்பான விளக்கம் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தவிர்க்க ஃபாஸ்டேக் (FASTAG) முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் மூலம் எளிதாகவும் விரைவாகவும் சுங்கக்கட்டணம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
A video is spreading misinformation about Paytm FASTag that incorrectly shows a smartwatch scanning FASTag. As per NETC guidelines, FASTag payments can be initiated only by authorised merchants, onboarded after multiple rounds of testing. Paytm FASTag is completely safe & secure. pic.twitter.com/BmXhq07HrS
— Paytm (@Paytm) June 25, 2022
இந்நிலையில், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு கருவிகள் மூலம் ஸ்கேனிங் செய்து ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது போன்ற வீடியோ ஒன்று சமீக காலமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், காரின் முன்பக்க கண்ணாடியை சுத்தம் செய்யும் சிறுவன் தனது கையில் அணிந்திருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் பகுதியைத் துடைக்கும்போது சிவப்பு நிறத்தில் ஸ்கேன் ஆகிறது. இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம், தனது ஃபாஸ்டேக்கை இப்படி ஹேக் செய்ய முடியாது என்று தெளிவுப்படுத்தி இருந்தது.
Please note that there are baseless and false videos circulating on Social media. Do understand the below points:
— NPCI (@NPCI_NPCI) June 25, 2022
1. No transactions can be executed through open internet connectivity. pic.twitter.com/yTcNGt8R0c
இந்நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் தவறான வீடியோக்கள் பரவி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். பின்வரும் புள்ளிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
1. திறந்த இணைய இணைப்பு மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது.
2.அனைத்து முன்நிபந்தனைகளும் இல்லாமல் எந்த நிதி பரிவர்த்தனைகளையும் தொடங்க முடியாது.
இந்த வீடியோக்களுக்கு பதிலளிக்கவும், சமூக ஊடக தளங்களில் இருந்து அவற்றை நீக்கவும் NPCI ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளத’ என தெளிவுப்படுத்தியுள்ளது.
newstm.in