மருந்துகளின் விலையை நாங்கள் உயர்த்தவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!!
மருந்துகளின் விலையை நாங்கள் உயர்த்தவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!!
அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10.7 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. காய்ச்சல், புற்றுநோய், நீரழிவு எதிர்ப்பு நோய், இரத்த அழுத்தம், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலை 10.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஒன்றிய அரசு உயர்த்தவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளித்துள்ளார்.
“அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்தவில்லை. அத்தியாவசிய மருந்துகளின் விலை, மொத்த விற்பனை விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலை உயர்ந்தால் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும், அது குறைந்தால் விலை குறையும். அத்தியாவசிய மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.