காளை மாட்டை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க.. போலீசில் விவசாயி புகார்..!

காளை மாட்டை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க.. போலீசில் விவசாயி புகார்..!

Update: 2022-02-02 04:45 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருச்செல்வம் இவர் தனது வீட்டில் இரண்டு காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை அன்று ஊரில் நடந்த எருதுவிடும் விழாவில் தனது இரண்டு காளை மாடுகளில் ஒரு காளை மாடு தொலைந்து போய்விட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஊர் ஊராக, வீதி வீதியாகச் சென்று இவரும் இவரது மனைவியும் தொடர்ந்து தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

குழந்தைபோல் வளர்த்த காளை மாடு தொலைந்துபோனதில் மிகுந்த வேதனை அடைந்த விவசாயி, கடைசியாக காளை மாட்டை தேடித் தர கோரி மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News