எங்களுக்கு வேறு வழியில்லை.. கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு..!
எங்களுக்கு வேறு வழியில்லை.. கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு..!
இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், ரூபாய் மதிப்பு சரிவு, ஜெட் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விமான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது.
இது குறித்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறியதாவது; “ஜூன் 2021 முதல் விமான எரிபொருள் விலை 120 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே, விமான எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விமான கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அவர் தெரிவித்தார்.