திருப்பூர் மக்களை வியப்பில் ஆழ்த்திய நாம் தமிழர் கட்சி..!
திருப்பூர் மக்களை வியப்பில் ஆழ்த்திய நாம் தமிழர் கட்சி..!
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பலமுனை போட்டி நிலவியது. திமுக தலைமையிலான கூட்டணி 37 வார்டுகளிலும், அதிமுக 19 வார்டுகளிலும், பாஜக மற்றும் சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 59 வார்டுகளில் போட்டியிட்டது. இக் கட்சி வேட்பாளர்கள் 7, 36, 40 மற்றும் 47 ஆகிய வார்டுகளில் 3 வது இடம் பிடித்தனர். போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 11,578 ஓட்டுக்களை இக்கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அக்கட்சி சார்பில் நன்றி தெரிவித்து பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘வாக்களித்த உறவுகளுக்கு நன்றி. பிற கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. ஓட்டு போட வராத வாக்காளர்களுக்கும் நன்றி' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் உள்ள வாசகம் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.