மோடியை விரட்டியடிப்போம்.. முதல்வர் சபதம்..!

மோடியை விரட்டியடிப்போம்.. முதல்வர் சபதம்..!

Update: 2022-02-12 12:57 GMT

பிரதமர் மோடியை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், யஷ்வந்த்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “தேசிய அரசியலில் டெல்லி கோட்டையை உடைக்க தயார்.

தேசிய அளவிலான எந்தவொரு திட்டத்தையும் தெலங்கானாவுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளை கூட தரவில்லை.


நீங்கள் தெலுங்கானா வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியடித்து, எங்களுக்கு உதவும் அரசைக் கொண்டு வருவோம்.

மத்திய அரசு இப்போது முன்மொழிந்த மின் சீர்திருத்தங்களை தெலுங்கானா அரசு நிச்சயம் செயல்படுத்தாது. தேவைப்பட்டால், தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக நமது நாட்டிற்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தால் போதும், டெல்லி கோட்டையை உடைக்க நான் தயாராக இருக்கிறேன், நரேந்திர மோடி கவனமாக இருங்கள். இங்கு யாரும் உங்களைக் கண்டு அஞ்சவில்லை.

பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றார். ஆனால், எரிபொருள் மற்றும் உர விலை உயர்வு என விவசாயிகளின் முதலீடு தான் இரட்டிப்பாகி உள்ளது.

ஜங்கானில் சில பாஜகவினர் டிஆர்எஸ் தொண்டர்களைத் தாக்கியதாகக் கேள்விப்பட்டேன். எனது கட்சி தொண்டர்கள் மீது யாராவது கை வைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலித் பந்து திட்டத்தை விரைவில் தெலங்கானாவில் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடங்க ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இப்படி, இந்த ஆண்டு மட்டும் 40,000 தலித்துகளுக்கு நிதி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு தலித் பந்து வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

Similar News