பேரறிஞர் காட்டிய வழியில் பயணிப்போம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

பேரறிஞர் காட்டிய வழியில் பயணிப்போம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

Update: 2022-02-03 13:20 GMT

அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கும் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்து புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

Similar News