வன்முறையை தூண்டுவோருக்கு ஆப்பு.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

வன்முறையை தூண்டுவோருக்கு ஆப்பு.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

Update: 2022-05-10 13:41 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று (10-ம் தேதி) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில், “கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள்.

தமிழகத்தில் வன்முறைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, மத மோதல்கள், சாதி சண்டை,  துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்ட எதுவும் இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு எனும் நற்பெயர் மீண்டும் கிடைத்துள்ளது.

குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கி தருவதே காவல்துறையினரின் பணி. காவல்துறையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். காவல்துறையினர் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கு இடமில்லாமல் பணியாற்ற வேண்டும்.

எந்த திசையில் இருந்து சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.

திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மோதல்களை ஏற்படுத்துவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கூலிப்படைகள் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். மதம், சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும்.

அங்கொன்றும், இங்கொன்றும் கூறி காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றங்களை தடுக்க முன்னுரிமை, காவல்துறை - மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன, அதை மீறி நடந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு கூட்டங்களை நடத்தி குற்றப்பிரிவு ஆலோசனைகளை காவல் உயர் அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்” என்றார்.

Similar News