என்னது! இதெல்லாம் கையெழுத்தா? - திகைத்துப்போன நீதிபதிகள் !!

என்னது! இதெல்லாம் கையெழுத்தா? - திகைத்துப்போன நீதிபதிகள் !!

Update: 2022-07-08 08:07 GMT

உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான வழக்கில் தேர்தல் ஆணையரின் கையெழுத்தைப் பார்த்து நீதிபதிகள் திகைத்துப்போய் விட்டனர்.

புதுச்சேரியில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தப்படுவது குறித்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் நீதிபதிகள் பார்வைக்கு சென்றது. அதனை பார்த்த நீதிபதிகள், பிரமாண பத்திரத்தில் தேர்தல் ஆணையர் கையெழுத்து இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும், கையெழுத்துகள் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் வெறும் கிராஸ் மார்க் மட்டுமே உள்ளது என நீதிபதிகள் கூறினர். அதற்குத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடுகையில், அதுதான் அவருடைய கையெழுத்து  யுவர் ஆனர். எனக் கூறினார். இதனை கேட்டு நீதிபதிகள் திகைத்துப்போயினர். மேலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலேயே அவர் அப்படித்தான் கையெழுத்திட்டுள்ளார், என வழக்கறிஞர் சந்திரசேகரன் விளக்கினார்.

எவ்வளவு முறை கூறியும் அந்த கையெழுத்தை தேர்தல் ஆணையர் மாற்றிக்கொள்ளவில்லை எனவும் வழக்கறிஞர் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சிரிப்போடு அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜூன் 21ஆம் தேதிக்குள் எதிர் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

newstm.in

Similar News