குளியலறைக்குள் கல்லூரி மாணவி செய்த காரியம்.. சோகத்தில் குடும்பத்தினர்..!

குளியலறைக்குள் கல்லூரி மாணவி செய்த காரியம்.. சோகத்தில் குடும்பத்தினர்..!

Update: 2022-02-21 15:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு நிவேதா(22) என்ற மகளும், சபரி(17) என்ற மகனும் உள்ளனர். நிவேதா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக நிவேதா சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். நிவேதா, சபரி மட்டும் வீட்டில் இருந்தனர்.

அப்போது, குளியலறைக்குள் சென்ற நிவேதா கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி ஓடிச் சென்று பார்த்தபோது, நிவேதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து சபரி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பதறியடித்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர், ஆம்புலன்ஸ் வரவழைத்து நிவேதாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நிவேதா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக, அவர் மேற்படிப்பு படிக்க விரும்பியதாகவும், குடும்பச் சூழல் காரணமாக தங்களால் இயலாது என பெற்றோர் கூறியதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News