இது என்ன சோதனை.. வாக்குமையத்தில் முதல் ஆளாக நுழைந்த பாம்பு.. அதிகாரிகள் அச்சம் !!

இது என்ன சோதனை.. வாக்குமையத்தில் முதல் ஆளாக நுழைந்த பாம்பு.. அதிகாரிகள் அச்சம் !!

Update: 2022-02-19 06:45 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செய்து முடித்துள்ளது. அரசு அலுவலகர்கள் ஒரு பக்கம், அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் மறுபக்கம், வாக்களிக்க தயாராகும் மக்கள் என தமிழகம் பரபரப்பாக உள்ளது.

வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணியின்போது பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது, வாக்கு எண்ணும் மையத்தை கடந்த 10 நாட்களாக தயார் செய்து வரும் நிலையில், நேற்று இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்தனர். அதற்குள் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு வெளியேறியது. இதனை கண்டு அச்சமடைந்து பலரும் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
 
அதை பார்த்த தொழிலாளி ஒருவர் துணிச்சலோடு நீண்ட தடியால் பாம்பை அடித்துக் கொன்றார். இதனால் அங்கு பணியில் உள்ள தொழிலார்கள் அச்சத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நபர் பாம்பை, வாக்குமையத்துக்கு மிக தொலைவில் கொண்டுவிட்டார். இதனால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

newstm.in
 

Similar News