கல்லூரியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற என்ன தகுதி? - விவரம் இதோ !
கல்லூரியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1000 பெற என்ன தகுதி? - விவரம் இதோ !
தமிழக சட்டப்பேரவையில் 2022- 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்லூரி சேரும் மாணவிகள் மாதம் ₹1000 பெற என்ன தகுதி?
- அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
- இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.
- இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.
- இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
newstm.in