அப்போ பொங்குனீங்களே, இப்போ என்ன செய்றீங்க..?: கேட்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி..!

அப்போ பொங்குனீங்களே, இப்போ என்ன செய்றீங்க..?: கேட்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி..!

Update: 2022-04-06 10:43 GMT

சொத்து வரி உயர்வு, தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டங்களை நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் அதிமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:  “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு, ஆமை வேகத்தில் செய்யப்படுகின்றன. அனைத்து கட்டடங்களுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. பணம் கட்டும்போது தான் மக்களுக்கு இதன் விபரீதம் புரியும்.

மத்திய அரசு சொன்னதால் வரியை உயர்த்தினோம் என்கிறார்கள். மத்திய அரசு சொன்னால் செய்ய மாட்டோம்; நாங்கள் வீரமானவர்கள் என சொல்கிறீர்களே, ஆனால், இதை மட்டும் மத்திய அரசு சொன்னதால் செய்தோம் என்கிறீர்கள்.

சொத்து வரியை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை. நிதி பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. சொத்து வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ரத்து செய்யாவிட்டால், கடுமையான போராட்டங்களை தொடர்ந்து செய்வோம்.ஏழை பெண்களுக்காக தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அந்தத் திட்டத்தை ரத்து செய்தது பெண்களுக்கு இழைத்த துரோகம். மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தியதால் டாக்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பொய் வழக்கு போடுவதில் திமுக அரசு நம்பர் ஒன்; டாக்டரேட் வழங்கலாம். போலீஸ் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

பொள்ளாச்சி பிரச்னையை வெளியே கொண்டு வந்தது பொள்ளாச்சி ஜெயராமன். பிரச்னையை திசை திருப்ப கனிமொழி வந்தாங்க; உதயநிதி வந்தாங்க; கூட்டணி கட்சிக்காரங்க வந்தாங்க. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, யாராக இருந்தாலும் கைது செய்ய முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆனால் இப்போது, விருதுநகரில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து கனிமொழிக்கு தெரியாதா, கூட்டணி கட்சிக்காரங்களுக்கு தெரியாதா; இது, நியாயமா, தர்மமா..? எங்கள் ஆட்சியில் பொங்குனீங்களே, இப்போது என்ன செய்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

Similar News