ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை ஈபிஎஸ்-க்கும் ஏற்படும் : டிடிவி அதிரடி!!

ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை ஈபிஎஸ்-க்கும் ஏற்படும் : டிடிவி அதிரடி!!

Update: 2022-07-14 17:18 GMT

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றதுஅதில் பேசிய டி.டி.வி.தினகரன் அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதை எம்ஜிஆர் கட்சி சட்ட திட்டத்திலும், உயிலிலும் கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. ஓபிஎஸ் இன்று அனுபவிக்கிறார். நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்.

இலங்கையில் இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மு..ஸ்டாலின் அதிக பொருட்செலவு செய்தால் அவரைகூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்குவார்கள்.

விரைவில் அதிமுகவை மீட்போம். தேர்தலின்போது வெளியிட்ட எந்த அறிவிப்புகளையும் நிறைவேற்றாத திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும். மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறினார்.

newstm.in

Similar News