யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

Update: 2022-03-09 04:30 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து யூடியூபில் அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், மீண்டும் யூடியூபில் அதே போன்று அவதூறு பரப்பியதாகவும், அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகள் தேவை என தெரிவித்த நீதிபதி, யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பன குறித்த விபரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Similar News