பாசக்கார தாய் 11 வயது மகளுக்கு செய்த காரியம்.. 23 ஆண்டு சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு..!

பாசக்கார தாய் 11 வயது மகளுக்கு செய்த காரியம்.. 23 ஆண்டு சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு..!

Update: 2022-02-10 10:56 GMT

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை சேர்ந்த 31 வயது விதவை பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அந்த விதவை பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜி அச்சுதன் (46) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதனிடையே, அஜி அச்சுதனுக்கு கள்ளக்காதலியின் மகள் மீது நாட்டம் ஏற்பட்டது. இதுபற்றி கள்ளக்காதலியிடம் கூறினார். அவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கள்ளக்காதலனுடன் விட்டு சென்றார். இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பத்தனம்திட்டா மாவட்ட நீதிமன்றம் சிறுமியின் தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் தலா 20 ஆண்டுகள், தாய்க்கு குழந்தைகள் நல சட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Similar News