பைக் இல்லனா என் காதலி என்ன நினைப்பாள்? - வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளைஞர் !

பைக் இல்லனா என் காதலி என்ன நினைப்பாள்? - வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளைஞர் !

Update: 2022-05-03 10:15 GMT

காதலியை அழைத்துச்செல்ல பைக் இல்லாததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 19 வயதான நாகராஜ் என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து மகனை பெற்றோர் படிக்கவைத்து வந்தனர். நாகராஜ் செங்கல்பட்டு அருகேயுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் நாகராஜ் தன் தந்தையிடம் பைக் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். தனது காதலியை அழைத்து செல்ல பைக் வேண்டும் என தந்தையிடம் கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார். ஆனால், தந்தை கன்னியப்பன் குடும்ப சூழ்நிலையை எடுத்துக்கூறி பைக் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை எனக் கூறியுள்ளார். 

காதலியை அழைத்துச்செல்லும் ஆர்வத்தில் இருந்த அவர், பைக் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்தார். மேலும் வீட்டில் தனியாக இருந்தபோது நாகராஜ் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து மறைமலை நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காதலியை அழைத்துச் செல்ல இருசக்கர வாகனம் வாங்கி தராததால் தூக்கு போட்டு இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in
 

Similar News