எப்போது ஒழியும் இந்த 'ஜாதி வெறி' ? சிறுவன் தண்ணீர் குடித்ததால் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்..!!
எப்போது ஒழியும் இந்த 'ஜாதி வெறி' ? சிறுவன் தண்ணீர் குடித்ததால் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மலையடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பிற்படுத்தப்பட்டோர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் அருந்தியுள்ளான். இதனைக் கண்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் அந்த சிறுவனை தாக்கி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பட்டியல இனப் பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்தினர். இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக கிராமம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு பிரிவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலில் படுகாயமடைந்த 8 பேரை போலீசார் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் நடந்த கலப்பு திருமணமும் இந்த மோதலுக்கு ஒரு காரணம் என்றும், தசரா பண்டிகையின் போது, பழைய பகையை மனதில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, கிராம மக்கள் கூறுயதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க மலையடா கிராமத்தில் அமைதியை கொண்டுவர போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.