சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும் ? ஒன்றிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும் ? ஒன்றிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Update: 2022-05-24 06:05 GMT

கடந்த 21-ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, “கலால் வரிக் குறைப்பின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மாநில அரசுகளும் வரிக்குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.” என்றார்.

மேலும், ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒரு ஆண்டுக்கு தலா ரூ. 200 மானியம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்த மானியம் கிடைக்க போவதில்லை மாறாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் பெற தகுதி உடையவர்கள்.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.20 கோடி பேருக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ள நிலையில், மற்றவர்களுக்கு எந்த மானியமும் வழங்கவில்லை. மேலும் ஒர் ஆண்டிற்கு அவர்கள் பெறும் 12 சிலிண்டர் மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுவதாகவும் அதற்கு மேல் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடையது என்று தெரிவித்துள்ளது. இந்த மானியத் தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இந்த மானிய தொகையை நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Similar News