அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? – இருதரப்புக்கும் நோட்டீஸ்!!

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? – இருதரப்புக்கும் நோட்டீஸ்!!

Update: 2022-07-12 06:00 GMT

சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவம் காரணமாக பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் .பன்னீர் செல்வம் தரப்புக்கு வருவாய் கோட்ட அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒற்றைத்தலைமை மோதலுக்கு மத்தியில் .பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த போது, அவரது ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலக கதவினை .பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உடைத்தனர்அவர்களை தொடர்ந்து அங்கு வந்த .பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் .பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.  அதிமுக தலைமை அலுவலகம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 145-ன் கீழ் முடக்கம் செய்யப்பட்டது.

வில்லங்கம் இருப்பதாக கருதப்படும் சொத்துக்கள் தான் 145 பிரிவின் கீழ் முடக்கப்படும்அந்த வகையில், ஒரு சொத்துக்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகளால் முடக்கப்படும். இதை பின்பற்றியே தற்போது அதிமுக தலைமை அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இருதரப்பினர் மற்றும் காவலர்கள் என மொத்தம் 47 காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News