யார் வெற்றிபெற்றாலும் நமக்கு லாபம் தான்.. தாயும் மகளும் ஒரே வார்டில் போட்டி

யார் வெற்றிபெற்றாலும் நமக்கு லாபம் தான்.. தாயும் மகளும் ஒரே வார்டில் போட்டி

Update: 2022-02-05 08:30 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்றுடன் வேட்புமனு நிறைவடைந்தது. இதில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில், ஒரே வார்டில் தாயும் மகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டில் தாய், மகள் ஆகியோா் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட என்.கோட்டீஸ்வரி நித்தியானந்தம் என்பவா் உதவித் தோ்தல் அலுவலா் ஆனந்தகுமாரிடம் மனுதாக்கல் செய்தாா். 

ஆனால், அதற்கு முன்னதாக தான், கோட்டீஸ்வரியின் மகள் பிரியா தினகரன் என்பவா் அதிமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். ஒரே வாா்டில், தாயும் சுயேச்சையாகவும் மகள் அதிமுக சார்பிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது வாக்காளா்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. 

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், யாரு களத்தில் வெற்றிபெற்றாலும் சரி அது நம்ம குடும்பத்தில் இருந்துதான் இருக்க வேண்டும் என கட்டம் கட்டிவிட்டார்கள் போல்.. என வழக்கம்போல் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இதேபோல், திமுகவிலும் பல்வேறு இடங்களில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 


newstm.in

Similar News