ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்..?: அப்பல்லோ டாக்டர்கள் விளக்கம்..!

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்..?: அப்பல்லோ டாக்டர்கள் விளக்கம்..!

Update: 2022-04-19 05:00 GMT

முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.

ஆறுமுகசாமி ஆணைய தரப்பும், சசிகலா தரப்பும் தன் தரப்பு விசாரணையை நிறைவு செய்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள், அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று மறு விசாரணை மேற்கொண்டனர்.


அப்பல்லோ மருத்துவர்கள் கிரிநாத், விஜய சந்திர ரெட்டி, பாபு ஆபிரகாம் மற்றும் ஸ்டான்லி மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ வழக்கறிஞர்கள் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

இதன்போது நீதியரசர் ஆறுமுகசாமி குறுக்கிட்டு, “ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்ததா..?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அப்பல்லோ மருத்துவர் கிரிநாத், “வெளிநாடுகளுக்கு இணையான சிகிச்சை முறைகள் அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதாலும், கடுமையாக உழைக்கக் கூடிய மருத்துவர்கள் இருப்பதாலும் அதற்கான அவசியம் எழவில்லை” என வாக்குமூலம் அளித்தார்.

Similar News