பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்..!!

பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்..!!

Update: 2022-02-14 11:36 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம் தேதி உடல் ஒன்று புதைக்கப்பட்ட நிலையில், கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று, புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்து விசாரணை செய்தனர்.

இதில், அந்தப் பெண் திட்டக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி அன்னபூரணி(55) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதால், நகைக்காக யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை செய்தனர்.

15 நாட்கள் ஆகியும் காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரின் உறவினர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, அன்னபூரணியின் அண்ணன் மகன் முருகானந்தம் (30) என்பவரின் செல்போன் எண்ணும் காட்டியது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அன்னபூரணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அன்னபூரணி பெயரில் சுமார் ஒரு 1 கோடி மதிப்பிலான சொத்துகள் பட்டுக்கோட்டையில் உள்ளது. அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும், கடந்த 1-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அன்னபூரணியை அடித்து கொலை செய்துள்ளார்.

அன்று இரவு, அன்னபூரணி உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தனி நபராக நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏரி பகுதிக்கு கொண்டு சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News