ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது ஏன்? - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் !!

ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது ஏன்? - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் !!

Update: 2022-05-10 04:55 GMT

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலின் போது சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் அதிமுக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.  

இந்நிலையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “திமுக பிரமுகர் நரேஷ்குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்” என்று கூறினார்.

சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வதை கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Similar News