திருமணமான ஒரு மாதத்தில் 4 மாசம் கர்ப்பமான மனைவி.. அதிர்ந்த கணவன் !!

திருமணமான ஒரு மாதத்தில் 4 மாசம் கர்ப்பமான மனைவி.. அதிர்ந்த கணவன் !!

Update: 2022-06-18 08:25 GMT

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து கணவனும், மனைவியும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், மனைவி தனக்கு வயிறு வலி எனக் கூறியுள்ளார். உடனடியாக மனைவியை அந்த இளைஞர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு பரிசோதித்த மருத்துவர் அந்த இளைஞரை அழைத்து சந்தோஷமான விஷயம். உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளார். அதுவும் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனைகேட்டு கடுமையான அதிர்ச்சிக்கு ஆளான கணவர் பெரும் குழப்பம் அடைந்தார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில் நான்கு மாத கர்ப்பமா என அப்பெண்ணின் கணவரின் பெற்றோரும் ஆத்திரம் அடைந்தனர். அதன்பின்னர் அங்குள்ள சூழல் அந்த மருத்துவருக்கு தெரியவந்தது.

இதனிடையே, அந்த பெண்ணை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டு, பெண்ணின் கணவர் குடும்பத்தினர் சென்றுவிட்டனர். மேலும் தங்களை ஏமாற்றியதாக பெண்ணின் மீதும் அவரது பெற்றோர் மீது போலீசில் புகாரளித்திருக்கிறார்.

அதில், ‘திருமணமாகி ஒன்றரை மாதம்தான் ஆகியிருக்கிறது. இன்னும் திருமண பந்தத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பே நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். அந்த பெண்ணாலும், பெண் வீட்டாராலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை மறைத்துதான் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், என புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவ அது பேசுபொருளாகியிருக்கிறது.


 newstm.in
 

Tags:    

Similar News