கணவன் இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்து மனைவி ரூ.25 லட்சம் அபேஸ்!!
கணவன் இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்து மனைவி ரூ.25 லட்சம் அபேஸ்!!
கணவன் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் கொடுத்து 25 லட்சம் ரூபாயை சுருட்டிச்சென்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நுர்ஜமால் ஷேக் என்பவர் வேலைக்காக நீண்ட வருட காண்ட்ராக்ட்டில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சில மாதங்களில் அவர் மனைவி ஷாஹினா கதும் அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார்.
நுர்ஜமால் ஷேக் தான் வெளிநாடு செல்லும் முன் தன் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளார். மேலும் வங்கி கணக்கில் பணமும் வைத்துள்ளார். இதை அறிந்த அவரது மனைவி இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க திட்டமிட்டார்.
இதற்கான உயிருடன் இருக்கும் தனது கணவர் இறந்துவிட்டதாக போலியாக சான்றிதழ் ஒன்றை உருவாக்கினார். அதைக் வைத்து இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பிய நுர்ஜமால் ஷேக்க்கும் தெரியவந்தது. உடனடியாக போலீஸை அணுகிய அவர், தன் மனைவி போலி சான்றிதழ் மூலம் 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதாக புகார் அளித்தார்.
மேலும், தனது மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்து அவருடன் தன் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in