மனைவி தற்கொலை.. அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனின் விபரீத செயல்.. அதிர்ச்சியில் மக்கள்
மனைவி தற்கொலை.. அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனின் விபரீத செயல்.. அதிர்ச்சியில் மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அம்மன் நகர் பகுதியில் சுதாகர் - ஆர்த்தி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. சுதாகர் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தொழில்பேட்டையில் பணியாற்றி வந்தார்.
ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் குடும்பத்தில் அனைவரும் தூங்கிய நிலையில் யாருக்கும் தெரியாமல் ஆர்த்தி விடியற் காலை 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் கிணற்றின் வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் கிணற்றை பார்த்தபோது ஆர்த்தியின் உடல் இருப்பதைக்கண்டு அவருடைய கணவரான சுதாகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த ஆர்த்தியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மனைவி இறந்த அடுத்த ஒருமணி நேரத்தில் சுதாகர் யாருக்கும் தெரியாமல் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து தனித்தனியாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறு தகராறு இரு உயிர்களை பிரித்தது மட்டுமல்லாமல் ஒரு உறவையே சிதைத்துவிட்டது.
newstm.in