மனைவி, மகளுக்கு கத்திக்குத்து.. போலீஸ் ஏட்டு வெறிச்செயல்

மனைவி, மகளுக்கு கத்திக்குத்து.. போலீஸ் ஏட்டு வெறிச்செயல்

Update: 2022-02-25 18:54 GMT

குடும்பத்தகராறில் மனைவி, மகளை போலீஸ் ஏட்டு கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் தெருவில் ராஜேந்திரன் (40) என்பவர் வசித்து வருகிறார். போலீஸ் ஏட்டான இவர், சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா (35). ராஜேந்திரன் - பூர்ணிமா தம்பதிக்கு, பத்மினி (16), கார்த்திகா (13), ராஜஸ்ரீ (10) என 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் வீட்டில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், தனது மனைவி பூர்ணிமாவை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தினார். இதனை அவருடைய மகள் பத்மினி தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

தாய், மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தது பார்த்தப்போது ரத்தம் கொடிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். மனைவி, மகளை போலீஸ் ஏட்டு கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

newstm.in

 

Similar News