பெண் குழந்தை பிறத்ததால் மனைவிக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை..!!
பெண் குழந்தை பிறத்ததால் மனைவிக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை..!!
மத்திய பிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 22). இவருக்கு பப்லு ஜாலா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.
இதற்கிடையில், லட்சுமி - பப்லு தம்பதிக்க்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், தனக்கு பெண் குழந்தை பிறந்த பப்லுவுக்கு பிடிக்கவில்லை. மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால், பப்லு தனது மனைவியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தாக்கியுள்ளார். மேலும் பப்லுவின் குடும்பத்தினரும் லட்சுமியை தாக்கியுள்ளனர்.
லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கொடூரத்தின் உச்சமாக லட்சுமியின் உடலில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். லட்சுமியின் கைகள், கால்களில் சூடு வைத்துள்ளனர். பல நாட்களாக லட்சுமியை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.
இதனை அறிந்த லட்சுமியின் உறவினர்கள் லட்சுமியை மீட்டு இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.