இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படுமா? - நிபுணர் விளக்கம் !!

இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஏற்படுமா? - நிபுணர் விளக்கம் !!

Update: 2022-03-09 19:15 GMT

இந்தியாவில் கொரோனா ஒன்று முதல் மூன்று அலைகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டாம் அலை தான் கொரோனாவின் உருவத்தை காட்டிச்சென்றது. ஏராளமான மக்களை உயிரிழக்கச் செய்த கொரோனா, மருத்துவத்துறையின் கட்டமைப்பை ஆட்டிப்படைத்தது. இரண்டாவது அலையின் போது டெல்டா, டெல்டா + உள்ளிட்ட திரிபு வகை கொரோனா பரவியது.

அதன்பிறகு ஒமைக்ரான் வகை கொரோனா பரவினாலும், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாள்தோறும் பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்ததால் ஓரளவுக்கு நிலைமையை சமாளித்து கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் நான்காம் அலை பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், தொற்றுநோயியல்  நிபுணருமான ஜேக்கப் ஜான், நேற்றைய (மார்ச் 8) நிலவரப்படி இந்தியாவில் 3,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 நாள்களுக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக்குறைந்த பாதிப்பு இதுவாகும்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை குறைந்து வருகிறது. இந்தியாவில் கரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்படாது கொரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் 3.4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகியது. கடந்த நான்கு வாரங்களாகவே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வந்துள்ளது. 

இதனால் தற்போது கொரோனா மூன்றாவது அலையின் இறுதிக்கட்டத்தை நாம் எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறினார். கொரோனா மூன்றாவது அலை ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்டது. ஒமைக்ரான் வகை மாற்றமடைந்த வைரஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தநேரத்தில் இருந்த மாற்றமடைந்த கொரோனா வகையைக் கொண்டே மூன்றாவது அலை ஏற்படாது என்ற கருத்து நிலவியது என்று கூறினார்.
 


newstm.in

Tags:    

Similar News