பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவரா? – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !!

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவரா? – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !!

Update: 2022-05-18 06:00 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்னும், சில நாட்களில் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ள நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தீர்ப்பு ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்த வழக்கின்போது, அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காதது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளனை விடுவிக்கவேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை, பல ஆண்டுகால போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

newstm.in

Similar News