படிப்படியாக நிறைவேற்றப்படும்.. ஆசிரியர்களுக்கு முதல்வர் உறுதி..!

படிப்படியாக நிறைவேற்றப்படும்.. ஆசிரியர்களுக்கு முதல்வர் உறுதி..!

Update: 2022-03-24 19:00 GMT

அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்தையும் கவனத்துடன் படித்துப் பார்த்த முதல்வர் ஸ்டாலின்,  “படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை நம்பி, நம்பிக்கையோடு காத்திருப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Similar News