வரலாற்றை தக்கவைக்குமா இந்திய மகளிர் அணி? - உலகக்கோப்பையில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதல் !!
வரலாற்றை தக்கவைக்குமா இந்திய மகளிர் அணி? - உலகக்கோப்பையில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதல் !!
நியூசிலாந்தில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய மகளிர் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.
இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது. இந்திய அணியில், அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது.
இதனால் நாளை ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்த 2017 - 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்றிருந்தது இந்தியா. இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை (மார்ச் 10), வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 12), இங்கிலாந்து (மார்ச் 16), ஆஸ்திரேலியா (மார்ச் 19), வங்கதேசம் (மார்ச் 22), தென்னாப்பிரிக்க (மார்ச் 27) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது.
newstm.in