வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படுமா? - மத்திய அரசு பதில் !!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படுமா? - மத்திய அரசு பதில் !!

Update: 2022-07-23 07:14 GMT

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் தெரிவித்தாா்.

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களில் தொழிலாளர்கள் வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.  எனினும் இதற்கு காலநீடிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த வருவாய் துறைச் செயலாளர், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பாகவே பெரும்பாலானவா்கள் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வாா்கள் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.

அதன்படி, தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் கணக்கு தாக்கல் எண்ணிக்கை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை அதிகரிக்கும்.

கடந்த முறை, வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை இறுதி நாளில் 9-10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. அதன்படி ஒரே நாளில் 50 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இறுதி நாளில் கணக்கு தாக்கல் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
 
 
newstm.in
 

Similar News