விரைவில் கள்ளுக் கடைகள் திறக்கப்படுகிறதா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு !!
விரைவில் கள்ளுக் கடைகள் திறக்கப்படுகிறதா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு !!
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா உட்பட பல மாநிலங்களில் உயர்ரக வெளிநாட்டு மதுக்கடைகள் இருந்தாலும், கள்ளுக் கடைகளும் இயங்குகின்றன. இதன் பலனாக அம்மாநிங்களில் பனை, தென்னை மரங்கள்பாதுகாக்கப்படுவதுடன், அவற்றில்கள் இறக்கப்படுவதால் விவசாயிகளும் பயனடைகின்றனர்.
குறிப்பாக கேரளாவில் மதுபானக் கடை அதிகம் இருந்தாலும், அதே அளவில் 4,590-க்கும் மேற்பட்ட கள்ளுக் கடைகளும் உள்ளன. இங்கு தென்னங்கள்தான் அதிகம் விற்கப்படுகிறது. தினசரி 8.25 லட்சம் லிட்டர் தென்னங் கள் உற்பத்தியாகிறது. 7.21 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ரூ.80 முதல் ரூ.100 வரையும், 750 மில்லி பாட்டில் ரூ.50, ஒரு கிளாஸ் ரூ.30 என பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
உடலுக்கு கேடு இல்லாத கள்ளை ஏழைத் தொழிலாளர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். கேரளாவுக்கு சுற்றுலா வருவோர் மத்தியில் கள் பிரதான பானமாக உள்ளது. கள்இறக்கம் தொழிலின்மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். தமிழகத்தில் மது பானங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கள் இறக்குவதற்கும், விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் வலுத்துள்ளது.
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனைக்கும் அனுமதி கோரிய, கள் இயக்கத்தினர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கள் உடலுக்கு எவ்வித தீங்கும் இல்லாத பானம் என்பதால் இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும், பனை தொழில் பாதுகாப்பு இயக்கத்தினர், கள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in