மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வருகிறதா வொர்க் ஃப்ரம் ஹோம்!?
மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வருகிறதா வொர்க் ஃப்ரம் ஹோம்!?
கொரோனா ஊரடங்கால், பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இதில் ஐடி நிறுவனங்கள் அனைத்துமே வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறையைக் கொண்டுவந்தது.
கொரோனா பரவல் தற்போது கிட்டத்தட்ட கட்டுப்பட்டிருக்கும் நிலையில், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் இனி அலுவலகத்துக்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளன. இந்தியாவில், டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி பெருநிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு பணியாளர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளன.
சில நாட்கள் அலுவலகம் மற்றும் விரும்பிய அல்லது தேவைப்படும் நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற ஹைப்ரிட் வொர்க் மோடு இனி விரைவில் அமலுக்கு வரும். அது மட்டுமின்றி, நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே அலுவலகத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டதாகவும் கூறியது.
எச்சிஎல் நிறுவனமும் ஹைப்ரிட் வேலை முறையை பின்பற்றி வருகிறது. இன்போசிஸ் நிறுவனமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊழியர்களை அலுவலகத்தக்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது. இதன் படி, வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
newstm.in