கம்பி எண்ணும் நாள் விரைவில்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்..!

கம்பி எண்ணும் நாள் விரைவில்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்..!

Update: 2022-02-03 19:30 GMT

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற யுக்தியை கையில் எடுக்கின்றனர்.

அதைப் பற்றி பேச திமுகவினருக்கு தகுதியும், அருகதையும் இல்லை. சமூக நீதிக்கு ஆபத்தில்லாமல் அதிமுக பாதுகாத்து வைத்திருக்கிறது. திமுகவில் உள்ள பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் அவர்கள் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும்” என்றார்.

Similar News